கோவையில் கண்காணிப்பு கேமராக்கள்

கோவை ஆர். எஸ். புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும் பெண்களின் பாதுகாப்பிற்காகவும் தனியார் நிறுவனத்தின் உதவியுடன் 350 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் வயர்கள் மூலம் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு கேமராக்களின்செயல்பாடுகளை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் நேற்று தொடங்கி வைத்தார்.

இது குறித்து மாநகர போலீசார் கூறியதாவது:- கோவை மாநகரில் உள்ள அனைத்து முக்கிய இடங்கள், மக்கள் கூடும் இடங்கள் மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட இடங்கள் ஆகியவற்றில் உள்ள கேமராக்களை இதேபோன்று கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன் மூலம் நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு முக்கிய இடங்களை போலீசரின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வருவதோடு குற்றத்தடுப்பு நடவடிக்கை முனைப்புடன் செயல்படுத்தவும், நடைபெற்ற குற்றங்களை விரைவாக கண்டறிய முடியும் என்றனர்.