கோவை செல்போன் கடையின் பூட்டை உடைத்து திருட்டு..!

கோவை போத்தனூர் பஞ்சாயத்து அலுவலக வீதியைச் சேர்ந்தவர் புண்ணியகோடி (வயது 35) இவர் அங்குள்ள சாரதா மில் ரோட்டில் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று முன் தினம் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் வந்து பார்த்தபோது கடையின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்து 10 செல்போன்கள் மற்றும் பழுது பார்க்க வந்த 4 செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது .இதுகுறித்து புண்ணியகோடி போத்தனூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.கொள்ளையன் கடைக்குள் புகுந்து செல்போனை திருடும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அதை வைத்து போலீசார் துப்புத் துலக்கி வருகிறார்கள்.