ஓடும் ரயிலில் 11 கிலோ கஞ்சா பறிமுதல் – 2 பேர் கைது..!

தமிழக ரயில்வே காவல்துறை ஏடிஜிபி வனிதா தமிழக ரயில்வே போலீசில் பணியாற்றும் அனைத்து காவலர்களையும் அழைத்து தமிழகத்தை கஞ்சா மற்றும் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றி காட்ட வேண்டும் என கடுமையான உத்தரவு பிறப்பித்து இருந்தார் . தமிழக ரயில்வே போலீஸ் டிஐஜி ராமர் மேற்பார்வையில் காட்பாடியில் இருந்து சேலம் செல்லும் தன் பாத் ரயிலை சாமல்பட்டி ரயில்வே ஸ்டேஷனுக்கும் மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு ம் இடையே அதி வேகமாக வந்து கொண்டிருந்தபோது பின்பக்க பொது ஜன பெட்டியில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்ரமணி தலைமை காவலர் ராதாகிருஷ்ணன் ரயில்வே போலீஸ் காவலர் முனுசாமி ஆகியோர் பயணிகளின் சீட்டுக்கு அடியில் சந்தேகப்படும்படியான ஒரு பையை எடுத்து சோதனை செய்தனர் . அதில் 6 பண்டல்களில் கமகமக்கும் வாசனை யோடு காணப்பட்ட 5 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். அதை கடத்தி வந்த சியாம் சுந்தர் கர்ணா (32) தகப்பனார் பெயர் சுதம் கர்ணா ரபேடி கிராமம் ஜோ கினார் பூர் போஸ்ட் மன்னா முண்டா காவல் நிலையம் எல்லைக்குட்பட்டது. பௌத் மாவட்டம் ஒடிசா மாநிலம் இவன் கொடுத்த வாக்குமூலத்தில் தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை செய்தால் கொள்ளை லாபம் கிடைக்கும் என்ற ஆசையில் வந்துவிட்டேன் எனக்கூறி உள்ளான். அவனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதே போல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலை கொல்கத்தாவில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை வந்த ரயில் 5 வது பிளாட்பார்மில் வந்து நின்றது .அதில் பயணம் செய்த மாதவன்(23) தகப்பனார் பெயர் மேகன் 8 வது தெரு பி வி காலனி வியாசர்பாடி சென்னை சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமை காவலர் பிரகாஷ் முதல் நிலை காவலர் பிரகாசம் ஆகியோர் குற்றவாளி மாதவன் என்பவனது பையை சோதனை செய்து பார்த்த போது 6 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . அவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.