ஆவடி மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல்.!!

ஆவடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் ஜி உதயகுமார் தலைமையில் நடந்தது ஆணையாளர் ஷேக் அப்துல் ரஹ்மான் முன்னிலை வகித்தார் .கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 47 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. பாதாள சாக்கடை தூர் வாருதல் குப்பை பிரச்சனை பிரதான சாலையில் அதிக வெளிச்சம் கொண்ட எல் இ டி விளக்குகள் அமைத்தல் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்துவது மழைநீர் வடிகால்வாய் பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிப்பது குடிநீர் பிரச்சினை தீர்க்க ஆழ்துளை கிணறு அமைத்தல் பட்டாபிராம் பகுதியில் தேவையான அடிப்படை மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை மேம்படுத்தி பொது மக்களின் பிரச்சினைகளை கேட்பதற்கு நான்கு மண்டல குழு தலைவருக்கும் தனித்தனி அலுவலகங்கள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட 47 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன கூட்டத்தில் ஆவடி மாநகராட்சியின் 2024ம் ஆண்டுல் 2025ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை கமிஷனர் ஷேக் அப்துல் ரஹ்மான் தாக்கல் செய்தார் மேயர் ஜி உதயகுமார் பெற்றுக்கொண்டார் ஆவ டி மாநகராட்சியின் மொத்த வருவாய் 523.96 கோடி மொத்த செலவினம் 538.06 கோடி பற்றாக்குறை 14.10 கோடி உள்ளது பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது .அதிகபட்சமாக குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக ரூபாய் 167. 43 கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது