போலி பத்திரம் போலி கையெழுத்து ஆள் மாறாட்டம்…

குற்றவாளி சின்னயனுக்கு 3 ஆண்டு கடுங்காவல் ரூ 35 ஆயிரம் அபராதம்
பூந்தமல்லி,  ராமசாமியின் மகன் சின்னையா வயது 61 இவன் பல ஆண்டு காலமாக அம்பத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு போலி பத்திரம் போலி கையெழுத்து போலியான ஆட்களை செட்டப் செய்து வீட்டு மனைகளை விற்பது நிலங்களை விற்பது சின்ன யனுக்கு கைவந்த கலை இந்நிலையில் சென்னை அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் தேவகி வயது 58 கணவர் பெயர் சோமசுந்தரம் சிநேகம் அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரை சந்தித்து சின்னையின் மீது புகார் மனு கொடுத்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது எனது இடத்தை ஆள் மாறாட்டம் செய்து போலி கையெழுத்து போட்டு போலி பத்திரம் தயாரித்து வெற்றிச்செல்வனுக்கு விற்றது போல் போலி ஆவண உதவியுடன் அண்ணா நகரைச் சேர்ந்த ரத்தினம் என்பவருக்கு விற்பனை செய்து பிளாட்எண் 34 ஏ என்ற இடத்தை கோடீஸ்வர ம்மா பாலாஜி பேப்ரிகேஷன் என்ற நிறுவனத்திற்கு விற்றது போலவும் சிட் கோ நிறுவனத்திற்கு புகார்தாரர் தேவகி கையெழுத்து போட்டது போல் போலியான ஆவணங்கள் கடிதங்கள் போலி சீல் கள் தயார் செய்து பெயர் மாற்றம் செய்துள்ளனர் இதுகுறித்து ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் குற்றவாளி சின்னையன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா அவர்களுக்கு உத்தரவிட்டார் அதன் பேரில் பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது வழக்கை தீர விசாரித்த நடுவர் குற்றவாளி சின்னையனுக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ35 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்