பாஜக தலைவர் தாக்க பட்ட சம்பவம் : உதகையில் ஆர்பாட்டம்…

நீலகிரி மாவட்ட பாஜக தலைவர் தாக்க பட்ட சம்பவம் குறித்து காவல்துறை இரு தரப்பினர் இடையே முறையான விசாரணை எடுக்க வேண்டும் உதகையில் ஆர்பாட்டம் .நீலகிரி மாவட்டம், உதகை கூடலுார் சாலையில் ‘மான்டிரோசா’ பகுதி யில் பா.ஜ., மாவட்ட தலைவர் மோகன்ராஜ் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். இதன் அருகில், கிறிஸ்துவ சபை வெளிப்பாட்டுத்தலம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு ஆங்கில புத்தாண்டு பிறப்பை ஒட்டி கிறிஸ்துவ சபையில் நள்ளிரவு பிரார்த்தனை நடந்துள்ளது. இதில், பங்கேற்க வந்த வாலிபர்கள் மோகன்ராஜ் வீட்டின் கேட் முன் வாகனங்களை நிறுத்தியுள்ளனர். அந்த வாகனங்களை எடுக்க சொல்லி மோகன்ராஜின் சகோதரர் முகேஷ் தெரிவித்துள்ளனர். அப்போது, ஊட்டி காந்தள் பகுதியை சேர்ந்த எபினேசர் என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டு வாய் கலப்பு பிறகு இரு பக்கமும் தகாத வார்த்தைகள் பயன்படுத்தியதால் கை களப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி காயப்படுத்தி உள்ளனர். இதில் காயமடைந்த மோகன்ராஜ், அவரது சகோதரர் முகேஷ் ஆகியோர், ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகராறில் காயமடைந்த எபினேசரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஜி1 போலீசார் மருத்துவமனைக்கு சென்று இரு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வழக்குபதிவு செய்தனர்,
நீலகிரி மாவட்ட பாஜக தலைவர் தாக்க பட்ட விவகாரத்தில் காவல்துறை முறையான சரியான நேர்மையான நடவடிக்கை இல்லை என கூறி இந்து அமைப்புகள் சார்பில் ஊட்டியில் ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ் கோவை கோட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, இந்து முன்னனி மாவட்ட தலைவர் வேலுசாமி,பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ராமன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் மாவட்ட பொது செயலாளர்கள் ஈஸ்வரன்,பரமேஸ்வரன்,கே.ஜெ.குமார்,நளினி சந்திரசேகர்,பொருளாளர் தருமன்,நகர மண்டல் தலைவர் பிரவின்,மாவட்ட செயலாளர்கள் அருண்குமார்,வெங்கடேஷ்,மாவட்ட துணை தலைவர் பாப்பண்ணன்,பிரகாஷ்,பாபு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் ஆர்பாட்டத்தில் சன்பரிவார்,பாஜக அமைப்பகளை சேர்ந்த.நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்
ஆர்பாட்டத்தில் முறையான சரியான நேர்மையான நடவடிக்கை எடுக்க கோரி முழக்கங்கள் எழுப்பட்டன. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டு இருந்தன.