வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட்டில் நள்ளிரவில் புகுந்த காட்டுயானையால் பொதுமக்கள் அச்சம்…

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் முதல் பிரிவு மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் நேற்று நள்ளிரவில் நுழைந்த மூன்று காட்டு யானைகள் அங்குள்ள இரண்டாவது பிரிவு நடத்துனரின் பழைய பங்களாவின் முன்புற தடுப்பு தகரத்தை இழுத்துத் தள்ளி அருகே உள்ள ஜன்னலை உடைத்து சேதப்படுத்தியுள்ளது சத்தம்கேட்டு உள்ளேயிருந்த தேயிலை ஆலை பணியாளர்கள் அந்தயானைகளை அப்பகுதியிலிருந்து விரட்டியுள்ளனர் அதைத்தொடர்ந்து சென்ற யானைகள் தேயிலையில் எலக்ட்ரீசியனாக பணிபுரியும் ரூபன் என்பவரின் வீட்டின் ஜன்னலை உடைத்து சேதப்படுதியுள்ளது இதில் அச்சமடைந்து அலறிய அவர் தனது உயிருக்கு பயந்து பின் வாசல் வழியாக வெளியே ஓடியவர் கீழே விழுந்து காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ள நிலையில் அருகே உள்ள தேயிலை ஆலை உதவி அதிகாரி தயாளன் வீட்டின் ஜன்னல் கண்ணாடியை உடைத்த சேதப்படுத்திய யானைகள் அருகே உள்ள தேயிலை ஆலை டீமேக்கர் ராஜீவ் என்பவரின் வீட்டிற்கு அருகே உள்ள வாழைமரங்களை சேதப்படுத்தியுள்ளது இதையறிந்த எஸ்டேட் நிர்வாகத்தினர் எஸ்டேட் பொதுமக்களை வைத்து காட்டுயானைகளை அருகே உள்ள வனப்பகுதியில் விரட்டியுள்ளனர் இச்சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் விடியும் வரை தூங்காமல் அச்சத்துடனே கண்விழித்து இருந்துள்ளனர் எனவே சம்பந்தப்பட்ட வனத்துறையினர் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்