உதகையில் நடைபெற்ற மக்கள் முதல்வர் குறைதீர்க்கும் முகாம்

தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி உதகையில் நடைபெற்ற மக்கள் முதல்வர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் உதகை நகராட்சித் தலைவர் முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.
நீலகிரி மாவட்ட உதகை மேரிஸ் ஹில் பகுதியில் உள்ள உதகை மறை மாவட்ட மறைப்பணி இயக்க நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் வழி காட்டுதலின்படி மக்களுடன் முத ல்வர் நகர மன்ற மக்கள் குறை தீர்க்கும் முகாம் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் மகாராஜா தலைமையில் நடைபெற்றது, முகாமில் அரசுத்துறை அலுவலக அதிகாரிகள் பணியில் முழுமையாக செயல்பட்டு வந்தனர், மக்களுடன் முதல்வர் முகாமினை நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி அவர்கள் ஆய்வு மேற்கொண்டு அரசுத்துறை அலுவலக அதிகாரிகளிடம் தற்போதைய நிலவர பணிகளை கேட்டறிந்தார், இந்த முகாமில் 7 நகர மன்ற வார்டுகளின் நகர மன்ற உறுப்பினர்கள் 27 ஜெயலட்சுமி சுதாகர், வார்டு 7 நகர மன்ற உறுப்பினர் விசாலாட்சி ,வார்டு 28 நகர மன்ற உறுப்பினர் தனலட்சுமி, (வார்டு 29 நகரம் என்ற உறுப்பினர் ராஜேஸ்வரி பாபு,) (வார்டு 30 நகர மன்ற உறுப்பினர் மீனா தியாகராஜ், )(வாடு 31, நகர மன்ற உறுப்பினர் பி ரவி, )(வார்டு 36 நகர மன்ற உறுப்பினர் கஜேந்திரன்,) ஆகியோருடன் நகர மன்ற தலைவர் வாணிஸ்வரி மக்கள் குறைகளை கேட்டு அறிந்து மனுக்களை அதிகாரிகளிடம் வழங்க ஆலோசனை வழங்கினார், மற்றும் முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார், நகராட்சி தலைவர் கூறியதாவது தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு முழுவதும் மக்களுடன் முதல்வர் என்ற மக்கள் குறை தீர்க்கும் திட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, கடந்த மாதம் 18ஆம் தேதி துவங்கி இன்று வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, இந்தத் திட்டத்தின் வழியாக அனைத்து மக்களும் பயன் அடைந்து வருகிறார்கள் என்றார், இத்திட்டம் இன்று நீலகிரி பகுதியில் கடைசி நாளாக உள்ளதால் அனைத்து பகுதிகளில் இருந்து மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது என்றார், இந்தத் திட்டத்தை கொடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார் உதகை நகர மன்ற தலைவர் வாணிஸ்வரி, உடன் நகர மன்ற உறுப்பினர்கள் 27 ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஜெயலட்சுமி சுதாகர், 30 ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர் மீனா தியாகராஜ் உடன் இருந்தனர், மக்கள் முதல்வர் குறைதீர்க்கும் முகாமில் 8 வார்டுகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை மனு
சாலை வசதி, ஆதார் பெயர் மாற்றம், நடைபாதை, வீட்டு மனை பட்டா, மகளிர் உரிமை தொகை, குடிநீர் விநியோகம், மின் இணைப்பு, போன்ற 800க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை வருவாய் கோட்டாட்சியர் மகாராஜா, மற்றும் வட்டாட்சியர் சரவணகுமார்,தனி வட்டாட்சியர்சங்கீதா ராணி, உதகை நகர வருவாய் ஆய்வாளர், மற்றும் முதன்மை அலுவலர்கள்
மக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர், நடந்த மக்கள் முதல்வர் முகாமில் பகுதி நகர மன்ற உறுப்பினர்கள் மக்களின் கோரிக்கை மனுக்களை கேட்டறிந்து அனைத்து ஆலோசனைகளை வழங்கி உதவி செய்தனர் திரளான மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்,