காக்கிச்சட்டை கடவுள் கொடுத்த வரம்: காக்கிகளின் கண்ணியம் காக்க பொதுமக்களை அழைக்கிறது ஆணையம்…

காக்கிச்சட்டை கடவுள் கொடுத்த வரம், காக்கிகளின் கண்ணியம் காக்க பொதுமக்களை அழைக்கிறது ஆணையம். இது சம்பந்தமாக கோவையைச்சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும் சமூக செயற்பாட்டாளருமான சங்கரமூர்த்தி கூறியதாவது; போலீஸ் என்றாலே பொதுமக்களிடையே ஒருவித வெறுப்பு சலிப்பு இயல்பாக ஏற்படுகிறது அதற்கு காரணம் ஒன்றல்ல இரண்டல்ல ஆயிரக்கணக்கில் உள்ளது. ஆனால் உண்மையிலேயே லஞ்சம் ஊழல் அயோக்கியத்தனம் இவைகளில் முன்னணியில் இருப்பது அரசியல்வாதிகளை தாண்டி பல அரசு துறையில் பணி புரியும் அரசு ஊழியர்கள் தான் என்றால் மிகை ஆகாது. போலீஸ் என்றதும் உடனடியாக வெறுப்பு வருவதற்கு காரணம், சீருடை அணிந்த போலீசார் மட்டும்தான் அனுதினமும் பொதுமக்கள் கண்ணில் அதிகமாக தென்படுபவர்கள் போலீஸ் பொதுமக்களிடையே ஒன்றுடன் ஒன்றாக கலந்து அனுதினமும் பணியாற்றுவது தான்.

மேலும் ஊடகங்கள், நாடகங்கள் சினிமா, டிவி தொடர்களில் போலீசாரை கேலி கிண்டல் செய்து மித மிஞ்சிய கற்பனை காட்சிகள் வெளியே வருவதால் தான். காவல் தெய்வங்களுக்கு இணையாக போற்றிப் புகழ வேண்டிய காவல்துறையில், சில கருப்பு ஆடுகள் இருக்கின்ற காரணத்தால் அவ்வப்போது ஒட்டுமொத்த காவல்துறைக்கே அவப்பெயர் ஏற்படுகிறது என்பது மட்டும் அனைவரும் அறிந்த உண்மை. இப்போதும் கூட பெரும்பாலும் தென் மாவட்டங்களில் உள்ள காவல் தெய்வங்களான கருப்பராயன் அய்யனார் போன்ற கோயில்களில் காவலர்களின் சிலையையும் வைத்து வழிபடுவது உண்டு. அப்படி வழிபடும் காவலர்களின் கண்ணியம் மேம்படுத்த வேண்டும் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் காவல்துறையிலேயே ஒரு ஆய்வு ஆணையம் அமைத்து மேலும் மேலும் என்ன செய்ய வேண்டும் என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் காவல் துறையை மேம்படுத்த வேண்டி இதுவரை நான்கு ஆணயங்கள் அமைக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது காவல் ஆணையம் தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. சென்னை அசோக் நகர் அசோக் பில்லருக்கு அருகில் உள்ள காவலர் பயிற்சி கல்லூரியில் இவ்வாணையம் இயங்கி வருகிறது. இவ்வாணையத்தின் தற்போதைய தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி சி.டி. செல்வம். மேலும் இரண்டு காவல் அதிகாரிகள், ஒரு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி, ஒரு மருத்துவர் மற்றும் ஒரு பேராசிரியரை கொண்டு இவ்வாணையம் இயங்குகிறது. இவ்வாணையத்தில் யார் வேண்டுமானாலும் தங்களது கோரிக்கைகளையும், ஆலோசனைகளையும் அல்லது அதிருப்திகளைக் கூட கீழே குறிப்பிட்டுள்ள மெயில் ஐடியில் பதிவு செய்யலாம், தொலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் மெயில் ஐடியில் பதிவு செய்வதே சிறந்ததாகும்.

எனவே பொதுமக்கள் அனைவரும் தங்கள் கருத்துக்களை… கீழே உள்ள மெயில் ஐடியில் பதிவு செய்ய ஆணையம் கேட்டுக்கொள்கிறது. நீங்கள் கூட கேட்கலாம் நாம் சொல்லக்கூடிய ஆலோசனைகளை காவல்துறை ஆணையம் ஏற்றுக் கொள்ளுமா.? என்று. உங்கள் சந்தேகம் நியாயமானது இதுவரை நான்கு முறை ஆணையம் அமைத்து என்ன மாற்றம் நடந்தது என்பது பற்றி யாருக்கும் வெள்ளை அறிக்கை தெரியாது வழக்கம் போல் அரசு துறையில் இது போன்ற கண் துடைப்பு முகாம்கள் நடப்பது உண்டு மக்கள் வரிப்பண காசுகளில் வெட்டி செலவு செய்யக்கூடிய முகாம்கள் பல உண்டு அப்படி கூட இருந்தாலும் நாம் வீசுவதை வீசி வைப்போம் விழுவது விழட்டும் என்கின்ற மனநிலையில் உங்களது குறைகளையும் புகார்களையும் மற்றும் நல்ல ஆலோசனைகளையும் கீழே இருக்கும் மெயில் ஐடிக்கு தயவு செய்து அனுப்பி வைக்கவும் என்பதுதான் எனது அன்பான வேண்டுகோள் என கூறியுள்ளார்.

இமெயில் ஐடி :Fifthpolicecommision@gmail.com
Cell:9498155777.