கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 100 அடி உயரத்தில் தேசியக்கொடி…

கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பாலகிருஷ்ணன் பதவி வகித்து வருகிறார்.இவர் பதவியேற்ற நாள் முதல் மாநகர காவல் துறையில் பல்வேறு சீர்திருத்த பணிகள் செய்துவருகிறார் நகரில் போக்குவரத்தில் நெரிசல் ஏற்படாத வகையில் பல இடங்களில் “யூடேன்” ,ரவுண்டானா, அமைத்துள்ளார்.ரவுடி அட்டகாசத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.இதனால் கடந்த ஆண்டில் விபத்து பலி எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்த நிலையில்,மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நவீன பூங்கா ஒன்றையும் உருவாக்கியுள்ளார்.இந்த பூங்காவின் நடுவில்,விமான நிலையம், ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளது போலகமிஷனர் அலுவலகத்தின் முன்புறம் 100 அடி உயரத்தில் தேசியக்கொடி கம்பம் அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டுள்ளார்.இதற்கான பணிதொடங்கி உள்ளதாக போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார் .