உலக கழிவறை தினம்: தலித் மாணவர்களை பறையடிக்க வைத்த அவலம் – தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவை ஆட்சியரிடம் மனு 

உலக கழிவறை தினம்: தலித் மாணவர்களை பறையடிக்க வைத்த அவலம் – தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவை ஆட்சியரிடம் மனு 

கோவை மாவட்டம் , பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியதற்குட்பட்ட கோலார்பட்டி ஊராட்சியில் , கோலார் பட்டி சுங்கம், செட்டிபாளையம், கெடிமேடு ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. இதில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். விவசாயம் சார்ந்த பணிகளை மேற்கொள்ளும், பட்டியல் சாதிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.

கோலார்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில் 100 க்கும் மேற்பட்ட மானவர்கள் தற்போது படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்றைக்கு ‘உலக கழிப்பறை தினம்’ மற்றும் ‘தூய்மை நடைபயணம்’ முழு சுகாதாரத்தை நோக்கிய மக்களின் பயணம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் பள்ளி மாணவ, மாணவியர்கள், ஊராட்சி மன்றத்தலைவர் , உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்த ஊர்வலத்தில் தாழ்த்தப்பட்ட மாணவர்களிடம் பறை இசை கொடுத்து வாசிக்க வைத்துள்ளனர். ஏற்கனவே பள்ளி தலைமையாசிரியர் மாணவர்களை கழிப்பறை, பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுத்தி வருகின்றனர். தீண்டாமையை கடைபிடிக்கும் ஊராட்சி நிர்வாகம் மற்றும் பள்ளி தலைமையாசிரியர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்ககோரி வெல்பேர் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் ஒன்றிய செயலாளர் திருமூர்த்தி பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் மனு அளித்தார்.