தண்ணி தொட்டியில் மூழ்கி பெண் பலி: மரணத்தில் சந்தேகம் என உறவினர்கள் குற்றச்சாட்டு – போலீஸ் விசாரணை

தண்ணி தொட்டியில் மூழ்கி பெண் பலி: மரணத்தில் சந்தேகம் என உறவினர்கள் குற்றச்சாட்டு – போலீஸ் விசாரணை

கோவை ரத்தினபுரி, தயிர் இட்டேரியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி தேவி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இதற்கு இடையே ஒரு சாலை விபத்தில் மூர்த்தி இறந்து விட்டார். இந்நிலையில் தேவி ஜி.வி ரெசிடென்சி குழுமத்தின் உப்பிலிபாளையத்தில் உள்ள ஜி.வி டவர்ஸ் அங்கு வீட்டு வேலைக்காக அருகில் வசிக்கும் ஜோதிமணி மற்றும் சரஸ்வதியுடன் வேலைக்கு சென்றார். அங்கு குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தார். அப்பொழுதே திடீரென தேவி மாயமானார். இதை அடுத்து அவரை உடன் பணிக்கு வந்த ஜோதிமணி மற்றும் சரஸ்வதி பல இடங்களில் தேடினர். ஆனால் அவர் எங்கும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சடைந்த அவர் தரை தளத்தில் தண்ணீர் தொட்டியை பார்த்த போது அதற்குள் தேவி இறந்து கிடந்தார்.

 

இது குறித்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிங்காநல்லூர் காவல்துறை மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பெயரில் விரைந்து வந்த அவர்கள் தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிங்காநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தண்ணீர் தொட்டிக்குள் தேவி எப்படி விழுந்தார் ? தவறி விழுந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து தேவியின் உறவினர்கள் கூறும் போது:-

தண்ணீர் தொட்டியில் தண்ணீர் பாதியாக மட்டுமே உள்ளதாகவும், அதில் எப்படி மூழ்கி இருந்திருக்க முடியும். இதனால் அவர் உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகம் உள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.