போலி மருத்துவ சான்றிதழ் பதிவு செய்ய வந்த பெண் கைது… எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் படித்ததாக டுபாக்கூர் நாடகம்..!!

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் அலுவலகத்தில் போலி மருத்துவ சான்றிதழ்களை பதிவு செய்ய வந்த என்னை போலீசார் கைது செய்தனர். எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றதாக நாடகமாடியது குட்டு வெளிப்பட்டது.

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆயிஷா தன்வீர் வயது 40 . இவர் சென்னை கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்ததாக கூறப்படுகிறது இவர் தனது படிப்பை தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிங் பதிவு செய்வதற்காக சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மருத்துவ அலுவலகத்திற்கு வந்துள்ளார். ஆயிஷா தன்வீர் கொண்டு வந்த மருத்துவம் படித்ததற்கான ஆவணங்களை சான்றிதழ்களை தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் பதிவாளர் காமராஜ் சரி பார்த்துள்ளார். அவை அனைத்தும் போலியானது என்று அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து பதிவாளர் காமராஜ் அரும்பாக்கம் உள்ள உதவி ஆணையர் ரமேஷ் தொடர்பு கொண்டு போலி மருத்துவ சான்றிதழ்களை எடுத்துக் கொண்டு வந்து ஒரு பெண் நாடகம் ஆடுகிறார். போலீசை அனுப்பி நடவடிக்கை எடுங்கள் என கூறினார். உடனே சம்பவ இடத்திற்கு அரும்பாக்கம் போலீசார் ஆயிஷா தன்வீரை கைது செய்து அரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர் .

விசாரணையில் ஆயிஷா தன்வீர் கூறுகையில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த நான் சென்னை கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்தேன். இதனை தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக அரும்பாக்கத்தில் உள்ள மருத்துவ கவுன்சில் அலுவலகத்திற்கு வந்தேன் என தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் அவர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் படித்தாரா என விசாரணை நடத்தினர் . அப்போது இங்கு அவர் படிக்கவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. அவர் போலி மருத்துவ சான்றிதழ்களை பதிவு செய்ய வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலியான மருத்துவ சான்றிதழ்களை தயார் செய்து கொடுத்தது யார் ஆயிஷா ரன்வீர் சரியான பதில் சொல்லாமல் இடித்த புலி போல் மௌனம் காத்தார் போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் . புழல் பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாள்..