கோவை மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட திருச்சி ரோடு சிந்தாமணிப்புதூர் சிக்னல் அருகில் இருகூர் பிரிவில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீர் 4 நாட்களுக்கு ஒரு முறை இருகூர் வழித்தடத்தில் திறந்து விடப்படுகிறது.
இந்த வழியில் வாகனங்கள் கடந்து செல்லும் போது நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வேலைக் செல்வோர் மீது இந்த கழிவு நீர் தெரிப்பதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அது மட்டுமின்றி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.. நோய் தொற்றால் தினந்தோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இருகூர் வாழ் பொதுமக்கள் மற்றும் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்ற சமூக ஆர்வலர்கள் இரூகூர் வாழ் அசோசியேஷன் சார்பில் முறையாக இந்த வணிக வளாகத்தின் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்கள். ஆனால் இதற்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை.

சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம்நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1974 (Water Act, 1974): வணிக நிறுவனங்களின் கழிவுநீர் அல்லது இரசாயனக் கழிவுகள் பொது வழியிலோ, நீர்நிலைகளிலோ நேரடியாகக் கலந்தால் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) மூலம் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.
இந்த கட்டிடம் பள்ளபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளதால் பேரூராட்சி தலைவர் செல்வராஜ் பேரூராட்சி செயல் அலுவலர் உடனடியாக இந்த கட்டிடத்தின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்று சுகாதார சீர்கேடு ஏற்படாத வண்ணம் பொதுமக்களின் நலன் கருதி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.









