தேர்தல் பத்திரங்களால் அதிக நிதி பெற்றது யார்..? – கொந்தளித்த அண்ணாமலை.!!

சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, எஸ்பிஐ வங்கி அளித்த தேர்தல் பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் தனது அதிகாரபூர்வ தளத்தில் அண்மையில் பதிவேற்றம் செய்தது.

இதில் அரசியல் கட்சிகளில் அதிகபட்சமாக ரூ.6,060.5 கோடியை நிதியாக பெற்றுள்ளது பாஜக. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக மீது குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இந்த சூழலில் இது குறித்து தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

‘தேர்தல் பத்திர விவகாரத்தில் பாஜக மீது காங்கிரஸ் உட்பட குற்றச்சாட்டு வைப்பவர்கள் அது தொடர்பாக உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் முறையிடலாம். அவர்கள் வசம் உள்ள ஆதாரங்களை அடிப்படையாக வைத்து இதை செய்யலாம். அது தொடர்பான வங்கிக் கணக்கை முடக்க சொல்லலாம். முதலில் தங்கள் வசம் உள்ள ஆதாரங்களை பத்திரிகையாளர்களின் பார்வைக்கு கொண்டு வர சொல்லுங்கள் பார்ப்போம்.

பாஜக மீது நம்பிக்கை கொண்டவர்கள், அபிமானிகள் தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை வழங்கி உள்ளனர். அதிக யாரும் தடுக்க முடியாது. திமுக ஒரே ஒரு மாநிலத்தில் தான் ஆட்சியில் உள்ளது. 21 மக்களவை தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது. கும்மிடிப்பூண்டி தாண்டினால் அந்தக் கட்சியே இல்லை. அவர்களுக்கு எப்படி கோடிக்கணக்கிலான பணம் வந்தது. ஆட்சிக்கு வந்த பிறகு 460 கோடி ரூபாயை தேர்தல் பத்திரம் மூலம் பெற்றுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருக்கும் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி இதே முறையில் அதிக நிதி பெற்றுள்ளது. இந்த நிதி எப்படி வந்தது என்று கேட்க வேண்டும். இதை கொடுத்தது யார்? அதனை தெரிவிக்க வேண்டும். 18 மாநிலங்களில் ஆட்சியில் உள்ள பாஜக, சராசரியாக திமுக பெற்றுள்ள நிதியை காட்டிலும் பாதியை மட்டுமே பெற்றுள்ளது’ என அவர் தெரிவித்தார்.

பாஜக – ரூ.6060.5 கோடி (47.46%)திரிணமூல் காங்கிரஸ் – ரூ.1,609.50 (12.6%)காங்கிரஸ் – ரூ.1,421.9 கோடி (11.1%)பாரத ராஷ்டிர சமிதி – ரூ.1,214.70 கோடி (9.51%),பிஜு ஜனதா தளம் – ரூ.775.50 கோடி (6.07%)

திமுக – ரூ.639 கோடி (5%)ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் – ரூ.337 கோடி (2.64%)தெலுங்கு தேசம் – ரூ.218.90 கோடி (1.71%)சிவசேனா – ரூ.159.40 கோடி (1.24%)ராஷ்ட்ரிய ஜனதா தளம் – ரூ.72.50 கோடி (0.57%)