கோவையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் :முஸ்லீம் அமைப்புகளுடன் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேச்சுவார்த்தை..

கோவை :தமிழ்நாடு முழுவதும் வருகிற 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அன்றைய தினம் இந்து அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினார் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெறும். பின்னர் இந்த விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று குளம், குட்டைகளில் கரைப்பார்கள் .கோவையில் குறிச்சி குளம், முத்தண்ணன் குளம், சிங்காநல்லூர் குளம், ஆகிய குளங்களில் விநாயகர் சிலைகள் ஆண்டுதோறும் கரைக்கப்படுகிறது .இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் அமைதியாக நடைபெறுவது குறித்து போலீசார் இந்து அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதன்படி முஸ்லீம் ஜமாத் நிர்வாகிகள் ஜாக் .டி .என். டி.ஜே .உள்ளிட்ட அமைப்புகளுடன் நேற்று போலீஸ்கமிஷனர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது இந்த கூட்டத்தில். துணை போலீஸ் கமிஷன் மாதவன் சிலம்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு கமிஷனர்பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:- கோவை மாநகரில் அமைதி நிலவ அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வேண்டும். ஊர்வலம் தொடர்பாக ஏதாவது பிரச்சனையென்றால் என்னை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும் 3 மாதங்களுக்கு ஒரு முறை முஸ்லிம் மற்றும் இந்து அமைப்புகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட முஸ்லிம் அமைப்பினர் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் அமைதியாக நடைபெற அனைத்துவித ஒத்துழைப்பு வழங்கப்படும். மேலும்இந்து அமைப்புகளையும் அழைத்து ஒரே நேரத்தில் இருதரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு போலீஸ் கமிஷன் பாலகிருஷ்ணன் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார் ..