அண்ணாமலை ஒரு வேலை வெட்டி இல்லாத நபர்.. ஊடகங்களில் எதையாவது பேச வேண்டும் என பேசுகிறார்- அமைச்சர் செந்தில்பாலாஜி சாடல் ..!

கோவை பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி பகுதியில் வரும் 24 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ள பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிகள் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேலை வெட்டி இல்லாத நபர் என்றும், நான் கேட்ட கேள்விகளுக்கு இதுவரை அண்ணாமலை பதிலளிக்கவில்லை எனவே அவர் பற்றிய கேள்விகள் கேட்பதை செய்தியாளர்கள் தவிர்த்துவிடலாம், என கூறினார்.
மேலும் ஊடகங்களை சந்தித்து எதாவது பேச வேண்டும் என்று பேசுகிறார் எனவும் குற்றம் சாட்டிய அவர், அண்ணாமலை முதலில் சொல்வதை புரிந்து கொள்ள வேண்டும் அல்லது புரிந்து கொள்கிற பக்குவம் இருக்க வேண்டும். இல்லையென்றால் தெரிந்து கொள்ள வேண்டும். இரண்டும் இல்லையென்றால் அவர் பற்றி பேசி நேரத்தைக் வீணடிக்க வேண்டாம், என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.