ED அதிகாரி அங்கிட் திவாரி மணல்குவாரி அதிபர்களிடம் 1000கோடி பேரம்மா?

சென்னை:அமலாக்கத்துறை அதிகாரியான அங்கிட் திவாரி திண்டுக்கல் மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் 20 இலட்சம் வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.மேலும் இதே அதிகாரி தான் தமிழக முழுவதும் மணல் குவாரிகளில் ரெய்டு நடத்தினார் என்பது குறிபிட்டட தக்கது. இதே அதிகாரி தான் மேலே உள்ள உயர் அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றும் மணல்குவாரி வழக்கை ஒண்ணும் இல்லாமல் பண்ண 1000 கோடி பணம் வேண்டும் என மணல் அதிபர்களிடம் பேரம் பேசி உள்ளார். ஆனால் அவர்கள் 500 கோடி பணம் தர ஒத்துக்கொண்டதாகவும் அதற்கு அக்கிட் திவாரி உயர் அதிகாரிகள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் எனவே 1000 கோடி தான் வேண்டும் என உறுதியாக கூறி உள்ளார். ஆனால் அந்த பேரம் அடைவதற்கு முன்னதாக திண்டுக்கல் மருத்துவர் புகார் கொடுத்ததால் அங்கிட் திவாரி கைது செய்யப்பட்டுள்ளார்.அங்கிட் திவாரியை லஞ்ச ஒழிப்பு துறை காவலில் எடுத்து விசாரித்தால் இன்னும் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியேறும் என கூறுகின்றனர் விவரம் அறிந்த அதிகாரிகள்