போலி 2000 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக பறிமுதல்: கோவையில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை… கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ் காலனியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் தங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த வீட்டை சோதனையிட்ட பொழுது ...

புதுடெல்லி: ஆகாஸா ஏர் கடந்த ஆகஸ்ட் 7-ல் பயணிகள் விமான சேவையை தொடங்கியது. சேவை தொடங்கி 60 நாட்கள் நிறைவடைந்த நிலையில் அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் பெல்ஸன் கவுட்டின்ஹோ செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: விமானப் பயணத்தின்போது வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவங்களை வழங்க வேண்டும் என்பதில் நிறுவனம் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் ...

இந்து கலாச்சார அடையாளத்தை தேவைக்காக திருப்பி கொண்டால் அதை ஏற்று கொள்ள முடியாது – புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் கோவை அவனாசிலிங்கம் மகளிர் பல்கலையில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தராஜன் விமானம் மூலம் இன்று காலை கோவை வந்தார். கோவை விமான ...

கோவையில் வீட்டில் கஞ்சா செடிகள் வளர்த்த தொழிலாளி கைது கோவை ஒத்தக்கால்மண்டபம் ஒக்கிலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (50). கூலி தொழிலாளியான இவரது வீட்டு அருகே கஞ்சா செடி வாசம் வருவதாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில், செட்டிபாளையம் போலீசார் முத்துப்பாண்டி வீட்டின் அருகே சென்று சோதனை செய்தனர். அப்போது அவரது ...

கோவையில்  இரண்டு ஆடுகள் தாக்கியது  கருஞ்சிறுத்தையா ?… கோவை தடாகம் அருகே காளையனூர் வாட்டர் கம்பெனி பகுதியில் இரவில் புகுந்த சிறுத்தை விஜயன் மற்றும் சுந்தரராஜ் என்பவர்களின் தோட்டத்தில் கட்டி வைத்திருந்த ஆட்டுக் குட்டியை தாக்கியதில் 2 ஆடுகள் பலியாகின. அங்கிருந்தவர்கள் துரத்தி அடித்ததால் ஆடுகளை விட்டு விட்டு சென்று விட்டது. மனிதர்களைத் தாக்கும் முன் ...

கோவை ஐயப்பன் கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி.. விஜயதசமி தினமான இன்று கோவை மாவட்டம் சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் வித்யாரம்பம் எனப்படும் எழுத்தறிவித்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் வந்து கல்விப் பணியினை தொடங்கினர். விஜயதசமி தினமான இன்று கல்வி பணியை துவங்கினால் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பது ...

கோவை நகை கடைகளுக்கு விநியோகம் செய்ய அனுப்பிய ரூ. 6.5 கோடி தங்க நகைகள் கையாடல். பெங்களூரில் 25 வருடமாக இயங்கி மொத்த வியாபார நகைக் கடையில் இருந்து, கோவை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு நகைகள் விநியோகம் செய்யபட்டு வருகிறது. இந்த நகைக் கடையில் ஊழியராக பணியாற்றுபவர் ராஜஸ்தானை சார்ந்த அனுமன் துவேசி. இவர், பெங்களூரில் ...

கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு: துடியலூரில் கைது செய்யப்பட்ட 3 பேர் வீடுகளில் கோவை மாநகர காவல் துறையினர் சோதனை… கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன் சித்தாபுதூரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியிருந்தனர். அதேபோல் காந்திபுரம் 100 அடி சாலையில் இருந்த இந்து முன்னணி நிர்வாகியின் கடையிலும் மர்ம ...

கோவை விமான நிலையத்தில் 5.6 கிலோ தங்கம் பறிமுதல் : சென்னையை சேர்ந்த இருவர் கைது… சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமான மூலம் கடத்தி வரப்பட்ட 5.6 கிலோ தங்க நகைகளை கோவை விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவரை கைது செய்தனர். சிங்கப்பூரில் இருந்து ...

வால்பாறைக்கு இடம்பெயரும் காட்டு யானைகள் கேரள வனப்பகுதியில் இருந்து வால்பாறைக்கு காட்டு யானைகள் இடம்பெயர்ந்து வருகின்றன. காட்டு யானைகள் வால்பாறை பகுதியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் வறட்சி தொடங்கியது. இதனால் வால்பாறை வனப்பகுதியில் இருந்த காட்டு யானைகள் கூட்டம் கேரள வனப் பகுதிக்கு சென்று விட்டன. தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வால்பாறை ...