கோவை ஐயப்பன் கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி

கோவை ஐயப்பன் கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி..

விஜயதசமி தினமான இன்று கோவை மாவட்டம் சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் வித்யாரம்பம் எனப்படும் எழுத்தறிவித்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் வந்து கல்விப் பணியினை தொடங்கினர்.

விஜயதசமி தினமான இன்று கல்வி பணியை துவங்கினால் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பது பெற்றோர்களின் நம்பிக்கை. இதன் ஒரு பகுதியாக கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் இன்று வித்யாரம்பம் நிகழ்வானது நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் வந்து கலந்து கொண்டனர். பச்சரிசியில் ஓம் கணபதி என எழுதி தங்கள் குழந்தைகளுக்கு கல்விப் பணியைத் துவங்கினர்.