கோவை நகை கடைகளுக்கு விநியோகம் செய்ய அனுப்பிய ரூ. 6.5 கோடி தங்க நகைகள் கையாடல்.

கோவை நகை கடைகளுக்கு விநியோகம் செய்ய அனுப்பிய ரூ. 6.5 கோடி தங்க நகைகள் கையாடல்.

பெங்களூரில் 25 வருடமாக இயங்கி மொத்த வியாபார நகைக் கடையில் இருந்து, கோவை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு நகைகள் விநியோகம் செய்யபட்டு வருகிறது.

இந்த நகைக் கடையில் ஊழியராக பணியாற்றுபவர் ராஜஸ்தானை சார்ந்த அனுமன் துவேசி. இவர், பெங்களூரில் இருந்து கோவையில் உள்ள நகைக் கடைகளுக்கு நகைகளை விநியோகம் செய்யும் பணியில் இருந்துள்ளார்.

மேலும், நகைகளை அந்தந்த நகை கடைகளில் ஒப்படைத்து, அதற்கான ரசீதை பெற்று பெங்களூருக்கு அனுப்பி பணம் பரிவர்த்தனை பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த மாதம் பெங்களூரிலிருந்து நகைகள் கோவைக்கு விநியோகம் செய்ய கொண்டு வந்த அனுமன் துவேசி, நகைகளை சமந்தப்பட்ட நகைக் கடைகளுக்கு தராமல் இருந்திருக்கின்றார்.

இந்த நிலையில், நகை கடை உரிமையாளர் சக்னால் காட்ரி நகைகளை கொண்டு வந்த அனுமன் தூவேசிடம் விளக்கம் கேட்டபோது, முறையாக பதிலளிக்காததால், அவர் நகைகளை கையாடல் செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில், அனுமன் துவேசி மீது நகை கடை உரிமையாளர் சக்னால் காட்ரி, வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் புகார் தந்திருக்கின்றார். அதில், அவர் 13.5 கிலோ எடையுள்ள 6.5 கோடி மதிப்பிலான தங்கத்தை கையாடல் செய்ததாக குற்றம் சாடியுள்ளார்.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.