கரப்பான் பூச்சி கட்சி’க்கு போட்டியாக வந்த ‘ஆகி ஜனதா கட்சி’

மெரிக்காவில் பயிலும் இந்திய மாணவர் அபிஜித் தீப்கே, சமூக வலைத்தளத்தில் கடந்த மே 16 அன்று ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’யை தொடங்கினர்.

அதாவது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இந்தியாவில் வேலையில்லாத இளைஞர்களை ‘கரப்பான் பூச்சிகள்’ என்று கூறியிருந்தார். இந்த கருத்து நாடு முழுவதும் உள்ள இளைஞர்களைக் கொந்தளிப்பில் ஆழ்த்தியது. இதற்கு, கண்டனம் தெரிவிக்கும் விதமாகத் தொடங்கப்பட்ட கட்சி தான் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’. இணையதளத்தில் நையாண்டியாக உருவாக்கப்பட்ட இந்த கட்சியில், தொடங்கப்பட்ட சில தினங்களிலேயே லட்சக்கணக்கானோர் சேர்ந்தனர். இந்த கட்சி குறித்த செய்திகள் நாடு முழுவதும் காட்டு தீ போலப் பரவியது. இது இந்தியாவைக் கடந்து பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளிலும் பரவியுள்ளது.

இந்நிலையில், இந்த கட்சிக்கு எதிராக ‘ஆகி ஜனதா கட்சி’ தொடங்கப்பட்டுள்ளது. அதாவது, கரப்பான் பூச்சி கட்சியின் அரசியல் நடுநிலைமையைக் கேள்விக்குள்ளாக்குவதே இதன் நோக்கம் என்று கூறப்படுகிறது. ‘ஆகி அண்ட் தி காக்ரோச்சஸ்’ என்ற அனிமேஷன் தொடரில் இருந்து ‘ஆகி ஜனதா கட்சி’ என்று பெயர் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

கரப்பான் பூச்சி கட்சியைத் தொடங்கிய அபிஜித் தீப்கேவின் அரசியல் பின்னணியை அம்பலப்படுத்துவதே முதன்மை நோக்கம் என்று இந்த கட்சியின் சார்பில் கூறப்பட்டுள்ளது. ஆகி கட்சியானது, அதன் இணைய தளத்தில் இந்த அமைப்பு அனைத்துவகையான கரப்பான் பூச்சிகளை அழிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தாங்கள் எந்த அரசியல் கட்சியின் பின்புலத்தில் இயங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.