கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு: துடியலூரில் கைது செய்யப்பட்ட 3 பேர் வீடுகளில் கோவை மாநகர காவல் துறையினர் சோதனை…

கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு: துடியலூரில் கைது செய்யப்பட்ட 3 பேர் வீடுகளில் கோவை மாநகர காவல் துறையினர் சோதனை…

கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன் சித்தாபுதூரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியிருந்தனர். அதேபோல் காந்திபுரம் 100 அடி சாலையில் இருந்த இந்து முன்னணி நிர்வாகியின் கடையிலும் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியிருந்தனர்.

இந்த வழக்கில் பெட்ரோல் குண்டு வீசியதாக சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கோவை துடியலூரைச் சேர்ந்த முஜிபூர் ரஹ்மான், சிகாபுதின், ரபீக், சதாம் உசேன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் கோவை மாநகர காவல்துறையினர் அவர்கள் வீட்டில் சோதனை நடத்த நீதிமன்றத்தில் ஆனை பெற்று இன்று துடியலூர் பகுதியில் 3 பேரின் வீடுகளில் 3 குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.