திருச்சி ஸ்ரீ குங்கும வல்லி அம்பிகைக்கு வளைகாப்பு உற்சவ விழா.!!

திருச்சி உறையூர் சாலை ரோட்டில் உள்ள ஸ்ரீ குங்குமவல்லி சமேத ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ குங்குமவல்லி தாயாருக்கு 74 வது ஆண்டு வளைகாப்பு திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள அம்பிகை ஸ்ரீ குங்குமவல்லி- வளைகாப்பு நாயகி என்று அழைக்கப்படுகிறார். வருடம் தோறும் தை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை வளைகாப்பு உற்சவம் தொடர்ந்து 74 ஆவது ஆண்டாக நடைபெறுகிறது. ஆண்டுதோறும் கர்பிணிப் பெண்களுக்காக சுகப்பிரசவம் நடைபெற வளைகாப்பு உற்சவம், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்கும், திருமண தடை நீங்கவும், களத்திர தோஷம், செவ்வாய் தோஷம், நாக தோஷம், திருமண தடை நீங்கவும், சந்தானம் பாக்கியம் பெறவும், மாங்கல்ய தோஷம் நீங்கவும் 48 நாட்கள் திரிசதி ஹோமம் பூஜை நடைபெறும்.ஆண்டுதோறும் இவ்விழாவினை பரம்பரை அறங்காவலர் கருணாமூர்த்தி, கோவில் பிரதான அர்ச்சகர் ஹரிஹர குருக்கள் தொடர்ந்து இவ்விழாவினை சிறப்பாக நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு 02.02.2024 வெள்ளிக்கிழமை கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் நடைபெற ஹோம பூஜை நடைபெற்றது. அதனையொட்டி கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு சம்பிரதாய பூஜைகள் நடைபெற்றது. பின்னர் குங்கும வல்லி தாயாருக்கு அர்ச்சிக்கப்பட்ட வளையல், குங்குமம், அம்பாள் படம் பிரசாதமாக கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்டது.
அடுத்த நாள் சனிக்கிழமை குழந்தை பாக்கியம் வேண்டி ஹோம பூஜைகள் நடைபெறும். அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை திருமண தடை நீங்க, மாங்கல்ய பாக்கியம் ஏற்பட வேண்டி ஹோம பூஜைகள் நடைபெறும். ஆண்டுதோறும் பக்தர்கள் திரளாக பூஜைகளில் கலந்து கொண்டு அம்பாளின் பரிபூரண நல்லாசிகளை பெற்று பயன் அடைந்தனர்.