கூடலூர் சாலைகள் சீர் அமைக்காததால் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள்.!

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் பண்டிகை காலங்களும் கோடை சீசன் துவங்கி உள்ளதால், சுற்றுலா பயணிகள் கர்நாடகா கேரளா ஆந்திரா போன்ற இடங்களில் இருந்து அதிகமாக வருவதால் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.  கூடலூர் நகரத்தின் இரண்டு பக்கமும் உள்ள வாகனங்களை ஒரு மாத காலத்திற்கு யாருக்கும் பார்க்கிங் கொடுக்காத அளவு மாவட்ட நிர்வாகமும், காவல்துறையினரும் சீர் செய்தால்தான். TRAFIC முறையாக செயல்படுத்த முடியும் என்று அப்பகுதியில் வாழும் மக்கள் தெரிவிக்கின்றனர். சுமார் 25 கிலோ மீட்டர் நீளம் அளவில் போக்குவரத்து நெரிசல் நாள்தோறும் ஏற்படுகின்றன. இதனால் அங்கு வியாபாரம் செய்யும் வியாபாரிகள் தங்களின் வியாபாரங்கள் பாதிக்கப்படுவதை யாருமே கண்டு கொள்வதில்லை என்று கூறுகின்றனர். உள்ளூர் மக்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. கல்லூரி பள்ளிகளுக்கு ஏற்ற நேரத்தில் செல்ல முடியாமல் மாணவ மாணவிகள் போக்குவரத்து நெரிச்சலில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டும். ஒரு ஆட்டோ கூட பயணிக்க முடியாத நிலை உள்ளது. ஆம்புலன்ஸ் உடனடியாக போக முடியாத அவல நிலை உள்ளது. மேலும். மாவட்ட நிர்வாகம் உடனடியாக பைபாஸ் சாலை அமைப்பதற்கு ஆய்வை மேற்கொள்ள வேண்டும். போக்குவரத்திற்கு பயந்து பாதி சுற்றுலா பயணிகள் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து செம்பாலாவுக்கு ரோடு அமைக்கப்பட வேண்டும். சில்வர் கிளவுட் எஸ்டேட்டில் இருந்து மார்த்தோமா நகருக்கு பைபாஸ் சாலை அமைக்கப்பட வேண்டும். அதிகாரிகளும் அரசியல் கட்சியினர் முயற்சி எடுத்தால் இவை நிறைவேறும் என்று கூடலூர் பாஜக நீலகிரி மாவட்ட ஊடகப்பிரிவு வலியுறுத்தி கூறினார்கள்.