கோவையில் இன்று ஊர்க்காவல் படை வீரர்களின் பயிற்சி நிறைவு விழா..!

கோவை போலீஸ் பயிற்சி பள்ளியில் ஊர்க்காவல் படைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 26 ஆண்கள், 7 பெண்களுக்கு 6 வார பயிற்சி நடந்தது. பயிற்சி நிறைவு விழா.16 பேர் கொண்ட ஊர்க்காவல் படை இசைவாத்திய குழு அறிமுக விழா, ட்ரோன் கேமரா மூலம் கண்ணீர் புகை குண்டு வீசும் ஒத்திகை ஆகிய முப்பெரும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

இதில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஊர்காவல் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.பின்னர் திறந்த ஜீப்பில் சென்று அணிவகுப்பை பார்வையிட்டார். 16பேர் கொண்ட ஊர்க்காவல் படை வீரர்களின் பேண்ட் வாத்திய குழுவை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர்,டி ரோன் மூலம் கண்ணீர் புகை கொண்டும் வீசும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் மாநகர ஆயுதப்படை துணை போலீஸ் கமிஷனர் முரளிதரன், உதவி போலீஸ் கமிஷனர் சேகர், ஊர்க்காவல் படை கமாண்டண்ட் தனசேகர், துணை கமாண்டண்ட் தேன்மொழி மற்றும் பலர் பங்கேற்றனர்.