கோவையில் பல்வேறு மோசடி வழக்குகளில் தொடர்புடைய பி.டெக். பட்டதாரி கைது. 3 கார்கள் பறிமுதல்

கோவை : கோவையை சேர்ந்தவர்கள் வினோத்குமார், ஸ்டான்லி ஜோன்ஸ் , ஆனந்தகுமார். இவர்கள் கோவை சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளனர். அதில் தங்களுடைய தொலைபேசி எண்ணை பயன்படுத்தி தங்களுக்கு தெரியாமல் யாரோ” போர்ட்” செய்து அதன் மூலம் ஆன்லைனில் தனது கிரிடிட் கார்டு மற்றும் லோன் அப்ளிகேஷனிலிருந்து பணம் பெற்று மோசடி செய்து விட்டதாக கூறியுள்ளனர். இதன் பேரில் கோவை சைபர் கிரைம் போலீசார் மோசடி உள்பட 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் அருண், சப் இன்ஸ்பெக்டர் சிவராஜ் பாண்டியன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து கோவைப்புதூரை சேர்ந்த காளிமுத்து மகன் விக்னேஷ் (வயது 31) என்பவரை நேற்று கைது செய்தனர் .விசாரணையில் பி.டெக் பட்டதாரியான இவர் தன்னுடன் பழகி வந்த நண்பர்களின் ஆவணங்கள் மற்றும் மொபைல் நம்பர்களை அவர்களுக்கு தெரியாமல் எடுத்துக் கொண்டு அவர்களின் தொலைபேசி எண்களை அவர்களுக்கு தெரியாமல் போர்ட் செய்து மேற்படி எண்களை பயன்படுத்தி அவர்களின் வங்கி கடன் அட்டை கணக்குகள் மற்றும் ஆன்லைன் லோன் அப்ளிகேஷனில் இருந்து பணம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இவரது மொபைல் போன்கள். மின்னணு சாதனங்கள் பல்வேறு சிம்கார்டுகள் வாகன உரிமங்கள் 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேற்படி இது போன்று யாரேனும் பாதிக்கப்பட்டிருப்பின் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.