திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் IPS வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை.!!

1.சாலையில்  வாகனம் ஓட்டும் பொழுது பழுது ஏற்பட்டால் வாகனங்களை   சாலையின் இடதுபுறத்தில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும்.
மீடியன்களுக்கு அருகில் வாகன நிறுத்தம் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.
2. அனைத்து கனரக வாகனங்களும் பிரத்யேக பார்க்கிங் பாதைகளில் மட்டுமே நிறுத்தம் செய்யப்பட வேண்டும்.
3. சாலை ஓரங்களில் நிறுத்தும் அனைத்து வாகனங்களும் பார்க்கிங் விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும்.
4. வாகனம் பழுதடையும் பட்சத்தில், மற்ற வாகனங்களுக்கு வாகனம் தெரியும் வகையில் பிரதிபலிப்பான் கூம்புகள் மற்றும் முக்கோணங்களைப் பயன்படுத்த வேண்டும். நெடுஞ்சாலை உதவிக்கு, 100ஐ அழைக்கவும்.
நாம் அனைவரும் போக்குவரத்து விதிகளை மதித்து சாலை விபத்தை குறைப்போம் என இச்செய்தி குறிப்பின் மூலம் கேட்டுக் கொள்கிறோம்.