இயற்கை உபாதை கழிக்க சென்றவரின் இருசக்கர வாகனத்தை திருடிய மூவர் கைது

ஓதிமலை சாலையில் இயற்கை உபாதை கழிக்க சென்றவரின் இருசக்கர வாகனத்தை திருடிய மூவர் கைது அன்னூர் போலீசார் விசாரணை…

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (40).இவர் தனது சொந்த வேலையாக கடந்த 23 ஆம் தேதி அன்று அன்னூர் வந்த பொழுது ஓதிமலை சாலையில் உள்ள சுமைதாங்கி பகுதியின் அருகே இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார்.திரும்பி வந்து பார்த்து பொழுது அவரது இருசக்கர வாகனம் திருடு போனது தெரிய வந்தது.

இதனைத்தொடர்ந்து அவர் அன்னூர் காவல் நிலையத்தில் கருப்பசாமி புகார் அளித்துள்ளார். அந்த புகாரியின் அடிப்படையில் அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று வடக்கலூர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது,டூவீலரில் வந்த மூவர் போலீசாரை கண்டதும் தப்பிச்செல்ல முயன்றுள்ளனர்.அவர்களை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் தீவிர விசாரணையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் பிரபு (25), சிறுமுகை பகுதியை சேர்ந்த சேர்ந்த சதீஷ் (21),தினேஷ் (24) என்பதும்,கருப்பசாமியின் இருசக்கர வாகனத்தை திருடியதும் தெரிய வந்தது.

இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.