இடத்தின் உரிமையாளர் கையெழுத்தை போட்டு பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி- கோவை தம்பதி குண்டர் சட்டத்தில் கைது..

கோவை ராமநாதபுரம் பகுதியில் க்யூப் ஸ்கொயர் கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்த ஜெகநாதன் மற்றும் அவரது மனைவி கலைவாணி ஆகியோர் பொதுமக்களிடம் இடம் வாங்கி வீடு தருவதாக கூறி மோசடி..

இடத்தின் உரிமையாளர் கையெழுத்தை போலியாக போட்டு பல நபர்களிடம் ஒப்பந்தம் போட்டு லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடி.

கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் நான்கு வழக்குகளும், பீளமேடு காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் , மாநகர குற்ற பிரிவில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் ஜெகநாதனை காவலில் எடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் 20 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து இடத்தின் உரிமையாளரிடம் கிரைய ஒப்பந்தம் போட்ட 20 லட்சத்தை கைப்பற்றியும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது

இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் அதற்கான ஆணை மத்திய சிறையில் இருவரிடமும் வழங்கப்பட்டது