வீடு இல்லாத 5 பேரின் வாழ்க்கை… மீட்டெடுத்த சமூக சேவகர்கள்.!!

கோவை சமூக சேவகர்கள் குழு ஒன்று இணைந்து வீடு இல்லாத 5 நபர்களின் வாழ்க்கையை மீட்டு மாற்றி அமைத்து உள்ளது.

எதிர்காலத்திற்கான புதிய நம்பிக்கையை அளித்து அவர்கள் நம்பிக்கையை மீட்டெடுத்தது மட்டுமல்லாமல் வீடு இல்லாத மக்களுக்கு இவர்களின் இரக்கம் மற்றும் ஆதரவின் தேவையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

கோவையில் செயல்பட்டு வரும் ஹெல்பிங் ஹார்ட்ஸ் தன்னார்வலர் குழு தெருக்களில் வசிப்பவர்களுக்கு உடனடியாக உதவி மற்றும் நீண்ட கால தேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது. நாளுக்கு நாள் நினைத்துப் பார்க்க முடியாத இன்னல்களை எதிர்கொண்டு சமுதாயத்தின் பிளவுகளில் விழுந்து கிடக்கும் நபர்களை கண்டறிந்து அவர்களுடன் இணைவதற்கான பயணத்தை இந்த குழு மேற்கொண்டு உள்ளது.

ஹெல்பிங் ஹார்ட்ஸ், 108 ஆம்புலன்ஸ் மற்றும் சமூக உறுப்பினர்களின் கூட்டு முயற்சியின் மூலம் திருச்சி சாலை அருகே உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பஜார் தெரு மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் அடையாளம் காணப்பட்டு தெருவில் வசித்து வரும் 5 நபர்களில் இதில் இருவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஒருவர் ஆபத்தான நிலையில் இருந்தவர் மேலும் இருவர் முதியவர்கள் இந்தக் குழு அவர்களை சந்தித்து உணவு வழங்கி, உடனடி நிவாரணம் வழங்கி, குளியலறை, சுத்தமான உடைகள் வழங்குதல் மற்றும் மேலும் பராமரிக்கப்படும் வெவ்வேறு அரசு தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களின் அடிப்படை தேவையான தேவைகளை பூர்த்தி செய்து வீடு இல்லாத தெருக்களில் வசிக்கும் நபர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி பயணத்தை தொடங்குவதற்காக உதவும், இந்த குழு உறுப்பினர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

ஒரு சமூகத்தை நோக்கி உதவிகரம் நீட்டவும், பணியாற்றவும், அனைவரையும் ஊக்குவிக்கின்ற கருணை செயல்கள் மற்றும் ஒவ்வொரு தனி நபரின் ஆற்றல் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையின் மூலம் அனைவருக்கும் வீடு என்று அழைக்கக் கூடிய ஒரு உலகத்தை உருவாக்க முடியும் என்றும் இதனை அந்தக் குழுவினர் செய்து வருகின்றனர்.