மக்களே!! ஷாக் நியூஸ் இதோ… தமிழகம் முழுவதும் இன்று முதல் மின் கட்டணம் அதிரடி உயர்வு.!!!

சென்னை: தமிழகத்தில் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது..

இந்த கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்ற அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளும் தொடர்கின்றன.

நாடு முழுவதும் நேரத்துக்கு ஏற்ப மின்கட்டணம் வசூலிக்கும் முறையை மத்திய அரசு அமல்படுத்த இருக்கிறது. பொதுவாக தற்போது மின்சாரத்தை ஒரு நாளின் எந்த நேரத்தில் பயன்படுத்தினாலும் ஒரே விதமான கட்டணம்தான் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில்தான் மாற்றம் வருகிறது.

அதன்படி மின்சாரத்தை மிக அதிக அளவில் பயன்படுத்துகிற நேரத்துக்கு அதிக கட்டணமும், குறைவான அளவில் பயன்படுத்துகிற நேரத்துக்கு இயல்பை விட குறைந்த கட்டணமும் வசூலிக்கப்படும். அதற்கு ஏற்ற வகையில், தற்போது நடைமுறையில் இருந்து வரும் மின்கட்டண பட்டியலில் 2 மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

அந்தவகையில், அதிகமாக மின்சாரம் பயன்படுத்தப்படுகிற ‘பீக் அவர்’ என்று அழைக்கப்படுகிற உச்சநேரத்தில் (அதாவது காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை) மின்கட்டணம் 10 முதல் 20 சதவீதம் அதிகமாக இருக்கும்.. அதேபோல, ‘சோலார் அவர்’ என்று அழைக்கப்படுகிற நேரத்துக்கு,இயல்பான கட்டணத்தைவிட 10 முதல் 20 சதவீதம் வரை கட்டணம் குறைவாக வசூலிக்கப்படும் என்பது உட்பட பல்வேறு விதிமுறைகளை சமீபத்தில் அறிவித்திருந்தது.

இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பின.. எனினும், வீடுகளுக்கு எவ்வித கட்டண உயர்வும் இருக்காது என்றும், விவசாயம், குடிசைகளுக்கு இலவச மின்சாரம் தொடரும். அதேபோல, வணிகம் மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டும் யூனிட்டிற்கு, 13 காசு முதல் 21 காசு வரை மின் கட்டணம் உயரும் என்றும் அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டிருந்தது.

அதன்படி, தமிழகத்தில் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வு, இன்று அதாவது ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது..

உச்சபட்ச மின்சார பயன்பாட்டு நேரத்தில், காலை 6 முதல் 10 மணி வரையிலும், மாலை 6 முதல் இரவு 10 மணி வரையிலும் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இது கொள்ளையைவிட கொடியது. இது வாக்களித்த மக்களுக்கு இழைக்கபடும் அநீதியாகும். இந்த கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.