கோவை நீதிமன்றத்தில் ஓவர் கஞ்சா போதையில் தள்ளாடிய வாலிபர் – கைது செய்ய உத்தரவு போட்ட நீதிபதி.!!

கோவை பாப்பநாயக்கன்பாளையம், ஜெய சிம்மபுரத்தைச் சேர்ந்தவர்உன்னி குமார் இவரது மகன் அபி என்ற அபிலேஷ் (வயது 32)இவர் கஞ்சா வழக்கு தொடர்பாக நேற்று காலை போதை பொருள் ஒழிப்பு கோர்ட்டில் ஆஜராக வந்தார். நீதிமன்றத்திற்குள் வந்த அவர் கஞ்சாபோதையில் அங்கும் இங்குமாக தள்ளாடியபடி ஆட்டம் போட்டார். அங்கிருந்த நீதிமன்ற ஊழியர்களை தகாத வார்த்தைகளால் பேசினார்..இதை கவனித்த நீதிபதி. அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் நீதிமன்ற ஊழியர் லீமா ரோஸ் புகார் செய்தார். இதையடுத்து ரேஸ்கோர்ஸ் போலீசார் போதையில் தள்ளாடி ய அபிலேசை காவல் நிலையம் கூட்டிச்சென்று வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இவர் கோவை 5-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோர்ட்டு அருகே நடந்த கொலை சம்பவத்தை அடுத்து நீதிமன்ற வாசலிலும் வளாகத்திலும், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இதையும் மீறி போதை ஆசாமி நீதிமன்றத்துக்குள் புகுந்து ஆட்டம் போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.