புஷ்பா கணவர் மீது கோவையில் வழக்கு பதிவு

பணம் வாங்கிய புஷ்பா : சரியாக பேசாததை தட்டி கேட்டவருக்கு அடி உதை

கோவை உக்கடம் புள்ளுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (4). கூலி தொழிலாளியாக பணி புரிந்து வருகிறார் . இவருக்கு நன்கு அறிமுகமான அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி புஷ்பா என்பவருடன் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 50 ஆயிரம் ரூபாயை முருகனிடமிருந்து புஷ்பா வாங்கியுள்ளார். அந்த பணத்தை புஷ்பா திருப்பி கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் புஷ்பா கடந்த சில நாட்களாக பணம் கொடுத்த முருகனிடம் சரி வர பேசாமல் இருந்து உள்ளதாக கூறப்படுகிறது .இதை தொடர்ந்து முருகன் புஷ்பாவிடம் எதற்காக தன்னிடம் பேசாமல் இருக்கிறாய் என கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது அங்கு வந்த புஷ்பாவின் கணவர் முருகன் இது குறித்து முருகனிடம் சண்டை போட்டுள்ளார் .சண்டை முற்றிய நிலையில் இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர் .அப்போது புஷ்பாவின் கணவர் முருகன் வீட்டில் இருந்த அருவாளை எடுத்து வந்து பணம் கொடுத்த முருகனை வெட்ட முயன்றார். அப்போது பணம் கொடுத்த முருகனுக்கு கை மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது .இதை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து பணம் கொடுத்த முருகன் அளித்த புகாரின் பேரில் பெரிய கடை வீதி போலீசார் புஷ்பாவின் கணவர் முருகன், கண்ணன், ஹரி ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.