வேலை வாங்கி தருவதாக ரூ14 லட்சம் மோசடி: பெண் உட்பட 2 பேர் மீது போலீசில் புகார்.!

கோவை ஒண்டிப்புதூர் காமாட்சிபுரம் முத்துசாமி செட்டியார் வீதி சேர்ந்த ரமேஷ் .இவரது மனைவிபுனித வள்ளி ( வயது 33) இவர் கோவையை சேர்ந்த செந்தில்குமார் ,ரேவதி ஆகியோரிடம் தனது கணவருக்கும் ,தம்பிக்கும் அரசு வேலை வாங்கித் தருமாறு கூறி2017 ஆம் ஆண்டு ரூ 14 லட்சம் கொடுத்து இருந்தாராம். செந்தில்குமாரும், ரேவதியும் வேலை கொடுக்கவில்லை.பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த புனித வள்ளி சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் செந்தில்குமார், ரேவதி ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.