கோவை அரிசி கடையின் ஓட்டை பிரித்து அரிசி, பணம் கொள்ளை.!

கோவை சரவணம்பட்டிசிவானந்தபுரம் அரிசி கடைபஜாரில் அரிசி கடை நடத்தி இருப்பவர் ஜெபஸ்டின் ராஜேஷ் ( வயது 36) நேற்று முன்தினம் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் வந்து பார்த்தபோது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த37 கிலோ அரிசி பணம் ரூ.3 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை யாரோ திருடி சென்று விட்டனர் . இது குறித்து செபஸ்டின் ராஜேஷ் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.