வைரஸ் காய்ச்சல் பரவல் எதிரொலி… தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

நாடு முழுவதும் இருமல், குளிர் ஜுரம் மற்றும் குமட்டல் ஆகிய பாதிப்புகள் அதிகரித்து காணப்படும் சூழலில், ஆன்டிபையாட்டிக் எனப்படும் பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கும் நுண்ணுயிரி கொல்லி வகை மருந்துகளை மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டாம் என இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐஎம்ஏ) அறிவுறுத்தி இருக்கிறது.

இவ்வாறு நாடு முழுவதும் தற்போது புதிய வைரஸ் காய்ச்சல் ஒன்று பரவி வரும் நிலையில், இதற்காக தமிழ்நாடு முழுவதும் வருகிற 10-ஆம் தேதி காய்ச்சலுக்காக சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் சற்றுமுன் அறிவித்துள்ளார். சென்னையில் 200 இடங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. சமீப நாட்களாக காய்ச்சல் காரணமாக தமிழக மருத்துவமனைகள் நிரம்பி வருவது குறிப்பிடத்தக்கது.