வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை..!!

தங்கம் விலை நேற்று புதிய உச்சமாக கிராம் ஒன்றுக்கு ரூ.6,000யைக் கடந்து விற்பனை செய்யபப்ட்டது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்னயிக்கப்பட்டு வருகிறது.

மார்ச் மாததொடக்கம் முதலே புதிய உச்சம் தொட்டு வருவதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த வகையில் நேற்று கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,015க்கும், சவரனுக்கு ரூ680 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ48120க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று கிராம் ஒன்றுக்கு ரூ.25 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,040க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்ந்து 5 நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 உயர்ந்து நகைப்பிரியர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்கம் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. பிப்ரவரி 28ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.46,480க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் பிப்ரவரி 29ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,520க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.25 உயர்ந்துள்ளது. இந்த தொடர் விலையேற்றம் நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.