கோவை அருகே பெண்ணை கட்டி போட்டு நகை -பணம் கொள்ளை .கட்டிட தொழிலாளி கைது…

கோவை சூலூர் சிந்தாமணி புதூர்அருகே உள்ள செல்வராஜபுரம், ராமையா நகரை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 43) இவர்களுக்கு 2மகன்கள் உள்ளனர் கல்யாணசுந்தரம் சவுதி அரேபியாவில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார் .இதனால் விஜயலட்சுமி தனது இரு மகன்களுடன் சிந்தாமணி புதூரில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் கட்டிட வேலை நடந்து வருகிறது .இங்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகை என்ற ஊரைச் சேர்ந்த பாபு (வயது 22)என்பவர் 3 நாட்களாக வேலை செய்து வந்தார் .இந்த நிலையில் சம்பவத்தன்று தனது மகன்கள் இருவரும் பள்ளிக்கு சென்று விட்டதால் விஜயலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார் …அப்போது அங்கு வந்த பாபு விஜயலட்சுமி யிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டி நகை-பணமஇருந்தால் கொடுத்து விடு. இல்லாவிடில்கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்..அதற்கு அவர் தன்னிடம் நகை பணம் எதுவும்இல்லை என்று கூறினார் இதனால் ஆத்திரமடைந்த அவர் விஜயலட்சுமியின் வாயை பிளாஸ்திரி போட்டு ஒட்டி, கை- கால்களை கயிற்றால் கட்டி போட்டார் ..பின்னர் பீரோவை திறந்து அதில் இருந்த 19பவுன் தங்க நகைகள், ரூ.6 ஆயிரம். பணம், 1தொலைபேசி, ஏ.டி. எம் கார்டு ஆகியவற்றை,கொள்ளை அடித்தார். அதன் பிறகு வீட்டின் கதவை வெளிப்பக்கமாக தாள் போட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார். மாலையில் பள்ளிக்கூடம் முடிந்து மகன்கள் 2 பேரும் வீட்டுக்கு வந்தனர். அப்போது கதவு வெளிப்பக்கமாக
தாழ்யிடப்பட்டிருந்தது. உடனே அவர்கள் கத்வை திறந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது தாயார்கயிற்றால் கட்டப்பட்டு தரையில் கிடந்தார். பின்னர் அவர்கள் விஜயலட்சுமியின் கட்டுகளை அவிழ்த்து விட்டனர் .இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.இன்ஸ்பெக்டர் மாதையன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.கொள்ளையனை பிடிக்க கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில்கருமத்தம்பட்டி டி.எஸ்.பி தங்கராமன் மேற்பார்வையில் சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தனிப்படைபோலீசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் நீலாம்பூர் புறக்காவல் நிலையம் அருகே பதுங்கி இருந்த பாபுவை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் விஜயலட்சுமியிடம் நகை பணத்தை கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டான். பின்னர் அவனிடமிருந்து 19 பவுன் நகை |ஒரு செல்போன் மற்றும் ஒரு பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்..கொள்ளையனை துரிதமாககைது செய்த தனிப்படையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பாராட்டினார்.