டெய்லர் தூக்கு போட்டு தற்கொலை..!

கோவை கஸ்தூரி நாயக்கன்பாளையம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் லோகநாதன் (46), டெய்லர். இவரது மனைவி மகேஷ்வரி. இவர் தினமும் தனது குழந்தைகளை அருகே உள்ள பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு தனது சகோதரரின் ஓட்டலுக்கு வேலைக்கு செல்வது வழக்கம். இதேபோன்று, சம்பவத்தன்று மகேஷ்வரி வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது, வீட்டில் தனியாக இருந்த லோகநாதன் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த தகவலை அறிந்த போலீசார் சம்பவயிடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வ