தமிழக கலாச்சாரத்தால் ஒட்டுமொத்த தேசத்துக்கும் பெருமை – பிரதமர் மோடி பெருமிதம்.!!

சென்னை: நடிகர் ரஜினி தனது ட்விட்டர் பதிவில், ‘இந்திய நாட்டின் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில், தமிழர்களின் ஆட்சி அதிகாரப் பாரம்பரிய அடையாளமான செங்கோல் ஜொலிக்கிறது.

தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த பிரதமர் மோடிக்கு, எனது மனமார்ந்த நன்றிகள்’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், ‘தமிழகத்தின் புகழ்பெற்ற கலாச்சாரத்தால் ஒட்டுமொத்த தேசமும் பெருமை கொள்கிறது. புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில், தலைசிறந்த மாநிலத்தின் கலாச்சாரம் பெருமைக்குரிய இடத்தைப் பெறுவது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.