தமிழகத்தில் அண்மையில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்துக்கு அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்து இருந்தது. மேலும் இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டு கவர்னரை சந்தித்தும் புகார் மனு கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அவர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அதன்படி இன்று தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்கள் முன்பு அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். கலெக்டர் அலுவலகங்கள் இல்லாத இடங்களில் தாசில்தார் அலுவலகங்கள் அல்லது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply