ஆளுநருக்கு சாரி சொன்ன சூப்பர் ஸ்டார்… மோடி அழைப்பு.. மீண்டும் டெல்லி செல்லும் ரஜினி..!!

ரஜினியின் பேச்சால் ஆளுநர் ஆர்.என்.ரவி அதிருப்தியில் இருப்பதாக தகவல் பரவுகிறது. இந்த நிலையில் ரஜினிக்கு மீண்டும் மோடியிடம் இருந்து அழைப்பு வந்திருப்பதால் அவர் மீண்டும் டெல்லி செல்லவிருக்கிறார்.

ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்து விட்டு வந்தது குறித்து தமிழக அரசியலில் சலசலப்புகள் எழுந்திருக்கின்றன. இந்த சந்திப்பு குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் ரஜினியாக நேரம் கேட்டுச் சென்றுதான் சந்தித்தார் என்கிறது ஆளுநர் மாளிகை வட்டாரம் .

தமிழக புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டதும் மரியாதை நிமித்தமாக அவரை சந்திக்க நேரம் கேட்டிருந்துள்ளார் ரஜினி. அப்போது ஆளுநரும் நேரம் கொடுத்திருக்கிறார். ஆனால் அந்த நேரத்தில் ரஜினி வெளிமாநிலத்தில் படப்பிடிப்பில் இருந்ததால் வர முடியவில்லை . அதனால் சாரி சொல்லி தகவல் அனுப்பி இருக்கிறார். அதன் பின்னர் மீண்டும் ஆளுநரை சந்திக்க வேண்டும் என்று நேரம் கேட்டு இருந்திருக்கிறார். அதன்படி தான் தற்போது ஆளுநர் நேரம் கொடுத்திருக்கிறார் .

இந்த சந்திப்பில் அரசியல் ,ஆன்மீகம் என்று பலவற்றையும் இருவரும் பேசி இருக்கிறார்கள். ஆனால் வெளியே வந்த ரஜினிகாந்த், ஆளுநருடன் அரசியல் பேசினேன் என்று சொல்ல, அது என்ன என்று செய்தியாளர்கள் கேட்க, அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாது என்று சொல்ல, ஊடகங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாத அளவிற்கு அப்படி என்ன ஆளுநருடன் அரசியல் பேசினார் என்ற சர்ச்சை எழுந்தது .

ஆளுநர் மாளிகை என்ன அரசியல் கட்சி அலுவலகமா? என்ற சர்ச்சையும் எழுந்திருக்கிறது. ரஜினியின் இந்த பேச்சினால் ஆளுநர் அதிருப்தியில் இருப்பதாக தகவல் பரவுகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடியை சந்திக்க மீண்டும் டெல்லி செல்கிறார் ரஜினி. கடந்த ஆறாம் தேதி அன்று சுதந்திர தின அமிர்த விழா கொண்டாட்டத்திற்கான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக ரஜினிகாந்துக்கு அழைப்பு வந்ததை அடுத்து அவர் டெல்லியில் சென்றார். அந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் பேசினார் . இந்த நிலையில் சுதந்திர தின கொண்டாட்டம் டெல்லியில் நடைபெற இருக்கிறது. அந்த விழாவிலும் பங்கேற்க ரஜினிக்கு பிரதமர் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ரஜினி மீண்டும் டெல்லி செல்ல இருக்கிறார்.