கல்லூரி ஊழியரிடம் நகை பணம் வழிப்பறி- திருநங்கைகளுக்கு போலீஸ் வலை.!

கோவை : நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் நிர்மல் குமார் ( வயது 32 )ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் கோவையில் உள்ள தனது நண்பரை பார்க்க ஜீப்பில் வந்தார் .அவர் கோவை திருச்சி ரோட்டில் உள்ள சிந்தாமணி புதூர் அருகே வந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த திருநங்கைகள் ஜிப்பை வழிமறித்தனர். பின்னர் நிர்மல் குமாரிடம் இருந்து 3 பவுன் நகைகள் ரூ2 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். இது குறித்து நிர்மல் குமார் சூலூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் நகை பணம் பறித்த திருநங்கைகளை தேடி வருகிறார்கள்.