போலீசாக நடித்து மாணவரிடம் செல்போன் பறிப்பு – 3 பேர் கைது..!

கோவை மாவட்டம் கிணத்துக்கிடவு பக்கம் உள்ள தாமரைக் குளம் வீரப்பன் நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் இவரது மகன் சிவபிரசாத் (வயது 18) இவர் பொள்ளாச்சி ஆண்டி கவுண்டர் வீதியில் உள்ள தனியார் டுடோரியல் மையத்தில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார் .நேற்று வகுப்பு முடிந்து ஆண்டி கவுண்டர் வீதி வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்தார் .அப்போது அங்கு நின்று கொண்ட 2 பேர் அவரை வழிமறித்து தங்களை போலீஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர் .லைசன்ஸ் ஆர்.சி. புக் உள்ளதா ?என்று கேட்டனர்.அவர் இல்லையென்றார் பிறகு அவரை  மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர் .இது குறித்து சிவப்பிரசாத் பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழக்கு பதிவு செய்து பொள்ளாச்சி ஜமீன் கோட்டம்பட்டி சின்னம்பாளையத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரபு (வயது 41) சூளேஸ்வரன் பட்டியை சேர்ந்த பெயிண்டர் சிவகுமார் (வயது 44) ஆகியோரை கைது செய்தார் .இவரிடம் திருட்டு செல்போனை வாங்கிய உடுமலை கரட்டு மடத்தைச் சேர்ந்த செல்போன் கடை அதிபர் அருண்பிரசாத் ( வயது 29) என்பவரும் கைது செய்யப்பட்டார்..