முதியோர் உதவித் தொகை ரூ. 1,200… அமைச்சரவைக் கூட்டத்தில் அதிரடி முடிவு..!

மிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அதாவது ஜூலை 22ஆம் தேதி நடைபெற்றது.

கலைஞர் மகளிர் உரிமை தொகை, கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படவிருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது. இந்நிலையில் அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, முதியோர் உதவித் தொகை ரூபாய் ஆயிரத்தில் இருந்து ரூபாய் 1,200ஆக உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளார். அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூபாய் 1,500ஆக உயர்த்தப்பட்டுள்ளது எனவும், கைம் பெண்களுக்கான உதவித்தொகை ரூபாய் 1,200ஆக உயர்த்தப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார். முதியோர் உதவித்தொகை மூலம் 30 லட்சம் பேட் பயன்பெறுவார்கள் எனவும் அவர் கூறினார். மேலும் இந்த உயர்த்தப்பட்ட உதவித்தொகை வரும் ஆகஸ்ட் மாதம் முதலே நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளார். 18 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதி வாய்ந்த ஒருவர் கூட விடுபட்டுவிடக்கூடாது என்பதில் முதலமைச்சர் மிகவும் உறுதியாக இருப்பதாகவும், இதுவரை ஏறத்தாழ 50 லட்சம் விண்ணப்பங்கள் பொதுமக்களிடத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளது எனவும், இது தொடர்பான முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் மூன்று கட்டங்களாக நடத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதாவது மொத்தம் 35ஆயிரத்து 925 முகாம்கள் நடத்தப்படவுள்ளதாக கூறினார். முகாம்களில் விண்ணப்பங்கள் பெறப்படும் என தெரிவித்தார்.

மேலும், முதியோர் உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளதால், அரசுக்கு கூடுதலாக ரூபாய் 845 கோடி ரூபாய் செலவாகும் எனவும் அமைச்சச் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு முதியோர் உதவித்தொகையில் 80 வயதுக்கு மேற்பட்டவருக்கு ரூபாய் 300உம், 80 வயதுக்கு குறைவானவர்களுக்கு ரூபாய் 200உம் வழங்குகிறது என்பதையும் செய்தியாளார் சந்திப்பில் துறைச் செயலர் குறிப்பிட்டார்.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பேசிய அவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தொடங்கி பெண்களின் பாதுகாப்பை வலுறுத்துபவர்கள் வரை அனைவரும் மணிப்பூர் கலவரம் குறித்து குரல் எழுப்பி வரும் நிலையில், தமிழ்நாட்டின் பிராதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக கள்ள மௌனம் காப்பது ஏன்? எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் எந்த கட்சிக்கும் அடிமை இல்லை என கூறியுள்ளார். ஆனால் மணிப்பூர் விவகாரத்தில் வாய் திறக்காமல் உள்ளது அதிமுகவின் இரட்டை வேடம் குறித்து அம்பலப்படுத்துகிறது எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.