பொள்ளாச்சி- பாலக்காடு ரோட்டில் உள்ள ஏ.டி.எஸ்.சி.தியேட்டர் அருகே மீன் கடை நடத்தி வருபவர் சிவகுமார் (வயது 49). நேற்று முன்தினம் இரவில் இவர் டியூசன் முடித்து வீட்டுக் சென்று கொண்டு இருந்த 15 வயது மாணவியை சிவக்குமார் அழைத்து, பாழடைந்த வீட்டின் அருகே இருந்து மூட்டையை தூக்க வேண்டும். உதவி செய் என்று அழைத்து சென்றார். பின்னர் சிறுமியிடம் மூட்டை தூக்கும் கொக்கியை காட்டி மிரட்டி, பாழடைந்த வீட்டுக்குள் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது அந்த சிறுமி சிவகுமாரை பிடித்து தள்ளிவிட்டு வெளியே ஓடி வந்துவிட்டார். தன் பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் சிவக்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்..
Leave a Reply