கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கோவிந்தநாயக்கன் பாளையம் பஸ் ஸ்டாப்பில் நேற்று மாலை சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா. சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் சோதனை செய்தனர். அவரிடம் 5.25 கிராம் எடை கொண்ட போதை மாத்திரைகள் ,520 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் கொண்டையம் பாளையம் பக்கம் உள்ள வரதய்யங்கார் பாளையம், லட்சுமி கார்டனைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 26) என்பது தெரிய வந்தது.கஞ்சாவும் போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Leave a Reply