கூடுதல் விலைக்கு மது விற்பனை… தட்டி கேட்ட வாலிபருக்கு மிரட்டல் விடுத்த விற்பனையாளர்..!

கோவை அவிநாசி சாலை ஹோப் கல்லூரி மசக்காளிபாளையம் செல்லும் சாலையில் மதுபான கடை உள்ளது. இந்தக் கடை தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் கோவை மாவட்ட வடக்கு வட்டத்தைச் சேர்ந்தது. இந்தக் கடையில் மது வாங்க வந்த வாலிபர் அந்த பாட்டிலில் பத்து ரூபாய் பெறுவதற்கான ஸ்டிக்கர் ஒட்டப்படாத குறித்தும், மதுவிற்கு கூடுதலாக இருபது ரூபாய் வசூலிக்கப்பட்டது குறித்து கடை விற்பனையாளர் கருணாநிதி இடம் கேள்வி எழுப்பினார். அப்பொழுது கடைக்குள் இருந்து வந்த உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் ஸ்டிக்கர் ஒட்டித் தர முடியாது என்றும் கூடுதலாக தான் விற்பனை செய்வோம் உன்னால் முடிந்ததை பார் என்று கூறி மிரட்டினார். இருந்தாலும் தொடர்ந்து அவர் கூடுதல் நிலை விற்பனை செய்வது குறித்து ஸ்டிக்கர் ஒட்டப்படாத குறித்து கேள்வி கேட்டார். அப்பொழுது கடைக்குள் இருந்த பார் உரிமையாளர் எழுந்த அவரை அடிக்கப் பாய்ந்தார். பின்னர் மதுபாரில் இருந்த ஊழியர்கள் அவரை மிரட்டி பாட்டில் வாங்கியாச்சா போய்க் கொண்டே இரு கேள்வி எதுவும் கேட்கக்கூடாது என்று தகாத வார்த்தைகளால் திட்டி அவரை அனுப்பினார்கள். இதனால் வேறு வழி இன்றி  அந்த வாலிபர் மனம் நொந்து கொண்டு சென்றார். மேலும் இந்த கடையில் வாடிக்கையாளர்களுக்கு பீர் வகைகள் தருவதில்லை என்றும் அந்த கடை ஒட்டியுள்ள மதுபான பாரில் ஒவ்வொரு பீருக்கும் ரூபாய் 40 ரூபாய் கூடுதலாக பெற்றுக் கொண்டு மதுபான பாரில் விற்கப்படுவதாகவும் இதற்கு கடை உரிமையாளர் மேற்பார்வையாளர்களை காரணம் என்றும் ஏராளமான மது பிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சமீப காலமாக மதுக்கடைகளில் பாட்டிலுக்கு மேல் பத்து ரூபாய் வாங்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்த நிலையில் அதனை மீறி கடையில் துணிச்சலாக நியாயம் கேட்ட வாலிபரை அடிக்க பாய்ந்து விரட்டி அடித்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இப்பகுதியில் உள்ள மூன்று கடைகளிலும் இதே போல் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகவும் கேட்டால் மிரட்டி விரட்டி அடிக்கப்படுவதாகவும் மதுப்பிரியர்கள் சராசரியாக குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து புகார் தெரிவித்தாலும் கோவை மாவட்ட காலால் பிரிவு அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்றும் தெரிவித்தனர்.