கோவையில் கடும் பனிமூட்டம்: முகப்பு விளக்குகளை எரிய விட்டு செல்லும் வாகன ஓட்டிகள் – வீடியோ..!

கோவை மாவட்டத்தில் கலந்து சில தினங்களாகவே இரவு நேரங்களில் பனிப்பொழிவு காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று விளக்கத்திற்கு மாறாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது .

சாலையில் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதன் காரணமாக சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து செல்கின்றன. மேலும் பிரதான சாலையில் இருந்து செல்லும் இணைப்பு சாலைகள் தெரியாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக கோவை எல் அண்ட் டி பைபாஸ் சாலை நஞ்சுண்டாபுரம் போத்தனூர் வாளையார் உள்ளிட்ட பகுதிகளும் புறநகர் பகுதிகளான தொண்டாமுத்தூர் நரசிபுரம் மாதம்பட்டி பகுதியில் கடும் பனிப்பொழிவு இன்று காலை ஏற்பட்டது. இதனால் அந்த சாலையே தெரியாத அளவிற்கு பணிகள் சூழ்ந்து காணப்படுகிறது இதன் காரணமாக அந்த சாலையில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன, கடும் பனிப்பொழிவு காரணமாக இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர் . விவசாய பகுதிகளான மேட்டுப்பாளையம் அன்னூர் காரமடை உள்ளிட்ட பகுதிகளில் காலையில் விவசாய பணிகள் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  ஒன்பது மணி அளவில் பணிபுரிவு முற்றிலும் சீராகும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.